[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS 8 நிமிட சண்டைக் காட்சிக்கு ரூ.70 கோடி: பிரபாஸின் ’சாஹோ’ தயாரிப்பாளர் தாராளம்
  • BREAKING-NEWS ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் விநோத போட்டி
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS “மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி

54 ஆயிரம் ஊழியர்களை நீக்க பிஎஸ்என்எல் ஒப்புதல் - மூடுவதற்கு திட்டமா?

bsnl-gives-approval-to-lay-off-more-than-54-000-employees-reduces-retirement-age-to-58-years-report

பிஎஸ்என்எல் நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியத் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தன. அது மட்டுமில்லாமல் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லும் சரிவையே சந்திக்க ஆரம்பித்தது. 

கடந்த 2017-18 ஆண்டு இறுதிவரை பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.31,287 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. மார்ச் மாத பாதியில்தான் கொடுக்கப்பட்டது. இது பிஎஸ்என்எல் வரலாற்றில் முதன்முறையாக நடக்கிறது.

இந்நிலையில், நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து மீட்டு புத்துயிர் கொடுப்பதற்கான முயற்சியில் பிஎஸ்என்எல் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தொலைத் தொடர்பு செயலாளர் அருணா சுந்தரராஜன், சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நிறுவனத்தின் பங்கு முதலீட்டுகளை குறைக்கலாமா..? அல்லது முடியாதென்றால் நிறுவனத்தை மூடிவிடலாமா என்பது உள்ளிட்ட அனைத்து வழிகளையும் ஆராய 10 முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.

          

இத்தகைய நிலையில், குழு வழங்கிய 10 ஆலோசனைகளில் மூன்றிற்கு பிஎஸ்என்எல் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வழங்கியுள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. 

அத்துடன், பணி ஓய்வு வயதை 60-லிருந்து 58 ஆக குறைக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி செய்தால், ஒரே ஒரு முடிவில் 33,568 ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும். கடன் தொகையை ஈடுபட்ட பிஎஸ்என்எல் நிறுவனம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஏனெனில் இந்த நடவடிக்கை மூலம் 13,895 கோடி ரூபாய் தொகை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சேமிக்கப்படும். 

விருப்ப ஓய்வுக்கான (விஆர்எஸ்) வயதினை 50 ஆக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பிஎஸ்என்எல் ஊழியர்களின் சராசரி வயது வரம்பு 55 ஆக மாறும். இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடும் எண்ணமில்லை என்றும் அக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close