[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்
  • BREAKING-NEWS தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது 'விர்ச்சுவல் சிம் கார்டு'-தீவிரமடையும் விசாரணை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு

போதைப் பொருட்கள் பயன்பாட்டில் கேரளாவுக்கு இரண்டாவது இடம்..!

kerala-s-rising-drug-use-problem

இந்தியாவிலேயே போதைப் பொருட்கள் பயன்பாட்டில் கேரள மாநிலம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக கேரள சுங்கத்துறை ஆணையர் ரிஷி ராஜ் சிங் தெரிவித்துள்ளார்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் சார்பில் மாதந்தோறும் "பெரியார் டாக்" என்ற பெயரில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த மாதம் "மாணவ சமூகத்தில் புழங்கும் போதைப்பொருள் ஒழிப்பில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பங்கு" என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

தேக்கடி பெரியார் புலிகள் காப்பக இணை இயக்குனர் ஷில்பா தலைமையில் நடந்த கருத்தரங்கில் குமுளி உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள், வனக்குழுவினர், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்றனர். கருத்தரங்கில் கேரள சுங்கத்துறை ஆணையர் ரிஷி ராஜ் சிங் கலந்து கொண்டார். அவர் போதைப்பொருள்களால் விளையும் தீமைகள் குறித்தும், பள்ளி, கல்லூரிகளில் மாணவ சமூகம் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாவது, அதிலிருந்து விடுபட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "போதைப்பொருட்கள் உபயோகத்தில் இந்தியாவிலேயே கேரளா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு கேரள  சுங்கத்துறை மூலம் 925 போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடுக்கப்பட்டது. அது 2018-ம் ஆண்டு 12 ஆயிரம் வழக்குகளாக அதிகரித்துள்ளது," என்று தெரிவித்தார். மேலும் மாணவ சமூகத்திலிருந்து போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க கேரள சுங்கத்துறை சார்பில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்ர்வு கருத்தரங்குகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close