[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“ரஃபேல் ஆவணங்களை திருடனே கொண்டு வந்து வைத்துவிட்டானா?” - சிதம்பரம் கேள்வி 

i-suppose-the-thief-returned-the-documents-says-p-chidambaram

புதன்கிழமை தொலைந்துபோன ரஃபேல் ஆவணங்களை வியாழக்கிழமையன்று திருடனே கொண்டு வந்து வைத்துவிட்டானா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்ற வழக்கில் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும், முறைகேடுகளும் நடக்கவில்லை என உச்ச‌நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து தீ‌ர்ப்பை மீண்டும் விசாரிக்க வேண்டுமென கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டது. 

இதில், வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், திருடுபோன ரஃபேல் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில்தான் ‘இந்து’ பத்திரிகை தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆவணங்களை ஏற்கக்கூடாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அரசுத் தரப்பு வாதங்கள் முடிவற்ற நிலையில் வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் திருடு போனதாக வெளிவந்த தகவல்கள் விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் எழுப்பியது. மீண்டும் தனது வாதத்தை தெளிவுபடுத்திய வேணுகோபால், ''நான் உச்சநீதிமன்றத்தில் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ரஃபேல் ஆவணங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சக்கத்திடமிருந்து திருடப்படவில்லை. அந்த ஆவணங்களின் நகல்கள்தான் பத்திரிகைகளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதை தான் எதிர் மனுதாரர்கள் பயன்படுத்தியதாக நான் குறிப்பிட்டேன்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வேணுகோபாலின் வாதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,  “ரஃபேல் ஆவணங்கள் புதன்கிழமை தொலைந்து போனது; வெள்ளிக்கிழமை நகல் ஆனது. இடையில் வரும் வியாழக்கிழமையன்று திருடனே ஆவணங்களைக் கொண்டு வந்து வைத்துவிட்டானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close