[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இன்றுடன் நிறைவடைகிறது கும்பமேளா !

kumbh-mela-ends-today

உத்தரபிரதேசத்தில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த கும்பமேளா இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 22 கோடி மக்கள் புனித நீராடியுள்ளனர்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் இடமான பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி மாதம்‌15-ஆம் தேதி மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. இதற்காக சகலவசதிகள் கொண்ட தற்காலிக நகரம் உருவாக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய தற்காலிக நகரம் என்ற சிறப்பை இது பெற்றது. இந்திரபிரஸ்தம் என்ற பெயரில் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட குடில்கள் அமைக்கப்பட்டன. பிரயாக்ராஜ் எல்லையிலிருந்து 250 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகளும் 22 தற்காலிக பாலங்களும் ஏற்படுத்தப்பட்டன.

கின்னார் அகாரா எனப்படும் திருநங்கை சாதுக்களும் கும்பமேளா நிகழ்ச்சியில் ‌முதல்முறையாக பங்கேற்றனர். பாலிவுட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவரும் சமூக ஆர்வலருமான லட்சுமி நாராயன திரிபாதி தலைமையில் திருநங்கைகளின் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வழிபாட்டு நிகழ்வாக இருந்தாலும் உலக சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன. ‌ கும்பமேளா பதாகைகளை தாங்கி, 500 பேருந்துகள் வரிசையாக சாலையில் அணி வகுப்பு நடத்தின. பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்து அணிவகுப்பு 3.2 கிலோ மீட்டர் வரை நீண்டது. இது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது. இதேபோல் 8 மணி நேரத்தில் ஏழாயிரத்து 664 பேர் உள்ளங்கை அச்சு பதித்த நிகழ்வும் கின்னஸ் சாதனையானது.

புனித நீராடல் நிகழ்ச்சியில், நகரைத் தூய்மையாக வைத்துக்கொண்டதில் துப்புரவுப்பணியாளர்களின் பங்களிப்பை உழைப்பைப் பாராட்டும்விதமாகவும், அது கின்னஸ் சாதனையாக மாற்றப்பட்டது. பத்தாயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக மூன்று நிமிடங்களுக்கு துப்புரவுப்பணி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 55 நாட்களாக நடந்த கும்பமேளா விழா மகா சிவராத்திரியன்று நிறைவடைவதால் இதை சிறப்பிக்கும் வகையில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close