[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

மரணத்திலிருந்து விடுவித்த கவிதை ! 

the-death-sentence-has-been-reduced-by-the-poetry-to-teach-in-jail-while-imprisoned

குழந்தையை கடத்தி கொன்றவருக்கு தூக்குத் தண்டனை விதித்த நிலையில் சிறையில் கல்வி கற்று எழுதிய கவிதைகளால் அவரது தண்டனையை குறைத்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தியானேஸ்வர் சுரேஷ் போர்கார் என்பவர் ஒரு குழந்தையை கடத்தி கொலை செய்ததாக 2006 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இதனால் சிறையில் அடைக்கப்பட்ட அவர், தண்டனையிலிருந்து விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிறையில் இருந்த காலகட்டத்தில் தாம் கல்வி பயின்று மனம் திருந்தியிருப்பதாகவும், வெளியுலகத்தில் சாமானிய மனிதராக வாழ விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

Image result for Supreme Court of India

இதனைதொடர்ந்து தியானேஸ்வர் சிறையில் இயற்றிய கவிதைகளை அந்த மனுவுடன் இணைத்திருந்தார். இந்த சூழலில் அந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தியானேஸ்வரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனர்.

Related image

இந்த தீர்ப்பு அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. மேலும் சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர் மனம் திருந்தியிருப்பதாகவும், அதற்கு அவரது கவிதைகளே சாட்சி என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த வழக்கை அரிதிலும் அரிதான‌ வழக்காகக் கருதி இந்த உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close