[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் தொடங்கியது!

cabinet-committee-on-security-meeting-has-started

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று தொடங்கியது. 

காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினர் 2 ஆயிரத்து 547 பேர் ஜம்முவில் இருந்து, 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தற்கொலை படை தீவிரவாதி, வெடிகுண்டு நிரப்பிய காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஒன்றை குறிவைத்து மோதினான். இதில் குண்டு வெடித்து பஸ் முற்றிலும் உருக்குலைந்தது. அதில் பயணம் செய்த வீரர்கள் அனைவரும் உடல் சிதறி விழுந்தனர்.

இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் உட்பட 44 பேர் உயிரிழந்தனர். 20 வீரர்கள் படு காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு சரியான பதில டி கொடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Security ) இன்று காலை 9.15-க்கு கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்தக் கூட்டம் இன்று காலை தொடங்கியது.

பிரதமர் மோடி தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஸ்ரீநகரில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close