[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

“காங்கிரஸ் கூட்டணி கட்சிகளே ராகுலை ஏற்கவில்லை” - சந்திரசேகர் ராவ் மகள்

everybody-felt-it-was-silly-says-kcr-s-daughter-on-rahul-hugging-modi

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்ததை பற்றி சந்திரசேகர் ராவ் மகள் கருத்து தெரிவித்துள்ளார். 

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டது. பாஜக தனித்து களம் கண்டது. இதனால், மும்முனை போட்டி நிலவியது.  இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 112 தொகுதிகளில் டிஆர்எஸ் 88 இடங்களில் வெற்றிப்பெற்று 2 வது முறையாக சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை ராகுல்காந்தி கட்டியணைத்தது தொடர்பான சந்திரசேகர் ராவின் கருத்து குறித்து அவரது மகளும் எம்பியுமான கல்வகுண்ட்லா கவிதா கருத்து தெரிவித்துள்ளார். அதில் ராகுல்காந்தியின் சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகளை குறித்தே தெலங்கானா முதல்வர் அவரை விமர்சித்திருந்தார். அதில் ஒளிவுமறை ஏதுமில்லை.  நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் அரசின் நடவடிகைகளுக்கு என்ன மாதிரியான எதிர்வினையை செய்யபோகிறார்என்று நாடே உற்றுநோக்கிய சமயத்தில், அவர் பிரதமர் மோடியைபோய் கட்டியணைத்தார். அனைவருமே அந்தச் செயலை சிறுபிள்ளைத்தனமான உணர்ந்தனர். ஆகவேதான் எங்கள் கட்சியின் தலைவர் அதற்கு எதிவினை புரிந்தார்.

மேலும் பேசிய அவர், தெலங்கானாவில் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றியில் மக்களின் நேரடி ஆதரவு இல்லை. பாஜகவின் கடும் போட்டியை டி20 கிரிக்கெட் போட்டியை பார்ப்பது போல மக்கள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் பலமான மாநிலக்கட்சிகள் இருந்திருந்தால் இந்தத் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி வந்திருக்கும். வரும் நாட்களில் மாநிலக்கட்சிகள் மத்திய தேர்தல்களில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது குறித்து கருத்து தெரிவித்த அவர், காங்கிரஸ் கூட்டணி கட்சியில் இருந்து ராகுலை முன்மொழிந்துள்ளனர். ஆனாலும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளே அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். புதியதாக வரப்போகும் பிரதமர் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருக்கும் மக்கள் பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களது கட்சி தெலங்கானாவில் இதனை சாதித்துள்ளது. எங்களது வெற்றி நாட்டுக்கே முன்னுதாரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close