[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து

“4 மாத உழைப்பு.. கிடைத்தது ரூ.1064..” எதிர்ப்பை பதிவு செய்ய அப்படியே பிரதமருக்கு அனுப்பிய விவசாயி..!

nashik-farmer-gets-rs-1-064-for-750kg-of-onion-sends-earnings-to-pm

எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக வெங்காய விவசாயத்தில் தனக்கு கிடைத்த  1,064 ரூபாயை மகாராஷ்டிர விவசாயி ஒருவர், பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி சஞ்சய் சாத்தே. விவசாயத்தை நம்பியே உயிர் வாழ்பவர். இவர் சமீபத்தில் தனது நிலத்தில் வெங்காய விவசாயம் செய்துள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள் இதற்காக இவர் கடுமையாக உழைத்திருக்கிறார். அதன்படி இவருக்கு 750 கிலோ வெங்காயம் கிடைத்துள்ளது. அதனை விற்க மொத்த விற்பனை கடைக்கு சென்றுள்ளார். ஆனால் 1 கிலோ வெங்காயத்தை 1 ரூபாய் என்ற கணக்கிலே எடுக்க முடியும் என கூறிவிட்டனர். பின்னர் தான் பட்ட கஷ்டத்தை எடுத்துக் கூறிய சஞ்சய், பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். இதனையடுத்து 1 கிலோ வெங்காயத்தை ரூபாய் 1.40 என்ற கணக்கில் அவர்கள் எடுத்துள்ளனர். 750 கிலோ வெங்காயத்திற்கு வெறும் 1064 ரூபாய் கிடைத்துள்ளது.

இவ்வளவு கஷ்ட பட்டு வேலை செய்தும் விவசாயத்திற்கு போதிய முன்னுரிமை இல்லையே.. விவசாயிகளால் லாபம் பார்க்க முடியவில்லையே என்ற வேதனையில் தனது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக தனக்கு கிடைத்த 1064 ரூபாயை பிரதமரின் நிவாரண நிதிக்கு சஞ்சய் அனுப்பியுள்ளார். அத்துடன் மணி ஆர்டர் செலவுக்காக கூடுதலாக 54 ரூபாயும் செலவழித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சேராதவன். ஆனால் விவசாயிகள் கஷ்டபட்டு உழைக்கிறார்கள். அவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற பலனில்லை. அதனால் இந்த அரசாங்கம் மீது கோபத்தில் இருக்கிறேன்” என கூறியுள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அப்போது முற்பாக்கு விவசாயிகள் சிலர் ஒபாமாவுடன் நேரில் பேச அனுமதி வழங்கப்பட்டது. அதில் சஞ்சய் சாத்தேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close