[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது

காணாமல் போன திருநங்கை வேட்பாளர் திரும்பினார்!

telangana-s-missing-transgender-candidate-turns-up-at-police-station

தெலங்கானாவில் மாயமானதாகக் கூறப்பட்ட திருநங்கை வேட்பாளர் நேற்று திரும்பினார்.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் டிஆர்எஸ், தெலுங்கு தேசம்-காங்கிரஸ் கூட்டணி, பாஜக இடையே மும்முனை போட்டி நடக்கிறது. 

இந்நிலையில் 32 வயதான சந்திரமுகி என்ற திருநங்கை, பகுஜன் இடது முன்னணி சார்பில் கோஷமகால் தொகுதியில் போட்டியிடுகிறார். சமூக ஆர்வலரான இவர் எம்.எல்.ஏ.வாகி, திருநங்கைகளின் நலனுக்கு குரல் கொடுப்பதற்காக தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். 

Read Also -> டெல்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் ஊர்வலம் 

காங்கிரஸ் மூத்த தலைவர் முகேஷ் கவுத், பாஜக சார்பில் போட்டியிடும் ராஜா சிங் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்ட அவர், செவ்வாய்க் கிழமை காலையில் அவரது வீடு இருக்கும் ஜவஹர்நகர் பகுதியில் இருந்து மாயமானார்.  இதையடுத்து அவரது தாய் அனந்தம்மா, பஞ்சரா ஹில்ஸ் போலீசில் புகார் கொடுத்தார். தனது மகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என அதில் கூறியிருந்தார். இது தொடர்பாக ஆட்கொணர்வு மனு ஐதராபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், அவரை கண்டுபிடித்து இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

Read Also -> பிரதமர் மோடியை நேருக்கு நேர் சந்திக்க விருப்பமா..? இருக்கிறது வாய்ப்பு..!

இந்நிலையில் சிசிடிவி கேமராவை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் முகத்தை மூடிக்கொண்டு தனியாக நடந்து செல்வ தைக் கண்டனர். பின்னர் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்றிரவு அவர் பஞ்சரா ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். அவரிடம் எங்கு சென்றிருந்தீர்கள், என்ன நடந்தது என்று கேட்டதற்கு சந்திரமுகி எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

‘என்ன நடந்தது என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார் சந்திரமுகி.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close