[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

ம.பி., மிசோரமில் வாக்குப்பதிவு தொடங்கியது.. மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

polling-begins-at-madhya-pradesh-and-mizoram

மத்திய பிரதேசம், மற்றும் மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும், மிசோமில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. மத்திரபிரதேசத்தில் 1,094 சுயேட்சைகள் உட்பட 2,899 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 5 கோடியே 4 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தேர்தலை அமைதியாக நடந்த ஏதுவாக, ஒரு லட்சத்து 80 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் நக்சல் அச்சுறுத்தல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இப்பகுதியில் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.பிற பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வட கிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள 40 தொகுதிகளில் 201 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இங்கும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில் அவர்களுக்கு எதிர்க்கட்சியான மிசோரம் தேசிய முன்னணி கடும் சவாலாக இருந்து வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close