[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்

nominations-begins-today-for-rajya-sabha-mp-elections

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 3-ம் தேதி கடைசி நாள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 11-ம் தேதி நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் அன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்.பி.க்கள் ஏ. ந‌வனீதகிருஷ்ணன், பவுல் மனோஜ் பாண்டியன், வில்லியம் ரபி பெர்னாடு, திமுக எம்.பி.க்கள் கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு, காங்கிரஸ் எம்.பி ஈ.எம்.சுதர்சனநாச்சியப்பன் ஆகிய 6 பேர் உட்பட மொத்தம் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close