[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாமல்லபுரத்தில் இந்திய கலாசார விழா நடத்துவதற்காக ரூ.75 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் - துணை முதல்வர் ஓபிஎஸ்
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு வலைவீச்சு..!

sexual-harassment-to-8-year-old-child

ஆபாச வீடியோக்களை காட்டி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 3-ஆம் வகுப்பு பத்து வருகிறார். சம்பவத்தன்று சுதா தனது வீட்டின் முன்பு மற்ற குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். அதனைப் பார்த்த பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவர், சுதாவை வீட்டிற்கு அழைத்துள்ளார். சுதாவும், அண்ணன் தான் கூப்பிடுகிறார் என நம்பி அந்த இளைஞரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது தனது மொபைலில் வைத்திருந்த ஆபாச வீடியோக்களை சுதாவிடம் காட்டிய அந்த இளைஞர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் கழிவறை சென்ற நேரத்தில் அங்கிருந்த தப்பிய சுதா, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் அளித்துள்ள புகாரைத் தொடர்ந்து அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே சுதாவிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அந்த இளைஞரின் பெயர் ஜிதேந்தர் என்றும் அவர் அங்குள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close