[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

தீபாவளி பட்டாசுக்கு கட்டுப்பாடு: வெடிக்கும் சமூக வலைத்தள சர்ச்சைகள்

supreme-court-order-rules-for-crackers-burst-social-media-comments

பண்டிகைகளின் போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

காற்று மாசு ஏற்படுவதற்கு பட்டாசு வெடிப்பது முக்கியம் காரணம் எனக்கூறி பட்டாசுகளை தயாரிக்க, விற்க மற்றும் இருப்பு வைக்கத் தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு எதிராக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். விதிகளுக்கு உட்பட்டு பட்டாசு தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கோரப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 

அதில் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பட்டாசுகளை தயாரிக்கவும், விற்கவும்‌ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பண்டிகைகளின் போது இரவு எட்டு மணி முதல் 10 மணி வரை அதாவது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11.55 மணி முதல் 12.30 வரை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பொது இடங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் பொருந்தும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் பட்டாசு வெடிக்க தடை விதித்தால், அனைவரும் மதிப்பார்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அப்படி குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்காமல் பகலில் வெடித்தால், நீங்கள் எத்தனை பேர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்வீர்கள்? எனவும் கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

சிலர் பட்டாசு எப்போது வெடிக்க வேண்டும் என்று கூறிய நீங்கள், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்று கூறிவிடுங்கள் எனத் தெரிவித்துள்ளனர். சிலர் பட்டாசு வெடிப்பதே கொசுக்களை ஒழிக்கத்தான் என்று தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று பலரும் தீபாவளி பட்டாசு வெடிப்புக்கு நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து கருத்துக்களை பதிவிட்டு தங்கள் தரப்பு வாதங்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close