[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

ஹைதராபாத் பல்கலை மாணவர் தற்கொலை:மத்திய அமைச்சர்,துணை வேந்தர் மீது வழக்குப் பதிவு

politics-protests-over-hyderabad-student-s-death-union-minister-booked-congress-demands-removal

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் தற்கொலையில் அரசியல் தலையீடு இருப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் புனியா தெரிவித்துள்ளார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமூலா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களை தாழ்த்தப்பட்டோர் ஆணையத் ஆணையத் தலைவர் புனியா சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புனியா, மாணவரின் தற்கொலை தொடர்பாக மாநில அரசிடம் இருந்து அறிக்கை கேட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என புனியா கூறினார்.

மாணவர் ரோஹித் தற்கொலை தொடர்பாக மத்திய அமைச்சர் பண்டாரு தத்ரேயா,துணை வேந்தர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தை கண்டித்து ஐதராபாத் மட்டுமின்றி மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் அமைப்புகள் இடையே ஏற்பட்ட மோதலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ரோஹித்திற்கு தொடர்பிருப்பதாகக் கூறி பல்கலைக்கழக நிர்வாகம் அவரை நீக்கியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close