[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

சாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா!

father-burns-alive-daughter-for-bid-to-marry-outside-caste

சாதி மாறி காதல் திருமணம் செய்துகொள்ள முயன்ற இளம்பெண், பெற்ற அப்பாவால் நடுரோட்டில் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் உள்ளது சைன்புர் சர்கார் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சுந்தர் லால் (52). இவர் மகள் லட் சுமி பாய் (19). இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். ராஜ்குமார் வேறு சாதியை சேர்ந்தவர். இவர்கள் காதல், சுந்தர் லாலுக்குத் தெரிய வர, எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அதையும் மீறி காதலனை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார், லட்சுமி. வீட்டில் அதற்குச் சம்மதிக்கவில்லை. ரகசியமாகப் பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதற்கு ஆதாரமாகப் பள்ளி சான்றிதழை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார், லட்சுமி. 

இந்தத் தகவல் அவரின் அப்பாவுக்குத் தெரிய வந்தது.  மகளை விரட்டிச் சென்ற அப்பா, அவரை தடுத்துப்பார்த்தார். இருவருக்கும் நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. லட்சுமி தனது காதலில் உறுதியாக இருந்தார். பின்னர், அருகில் இருந்த வீட்டுக்கு ஓடினார், லால். திரும்பி வந்தவர் கையில் மண்எண்ணெய் கேன் இருந்தது. இதை எதிர்பார்க்காத லட்சுமி உயிர் பயத்தில் ஓடினார். விடாமல் துரத்திய லால், மண் எண்ணெயை லட்சுமி மீது ஊற்றி தீயை பற்ற வைத்தார். தீ குப்பென்று பற்றிக்கொண்டது.

லட்சுமி அலறித் துடித்து, உயிர் பிழைக்கப் போராடினார். இதை அக்கம் பக்கத்தினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனரே தவிர யாரும் உதவ வில்லை. வலியால் துடித்த லட்சுமி அங்கும் இங்கும் ஓடி தரையில் உருண்டு புரண்டார். இருந்தும் தீ அவரை முழுமையாகத் தின்றுவிட்டது. சிறிது நேரத்தில் இறந்துவிட்டார் லட்சுமி.

இதுபற்றி சிலர் 100-க்கு ஃபோன் செய்து கூறினர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சுந்தர் லால் மற்றும அவர் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாதி மாறி திருமணம் செய்துகொள்ள முயன்ற மகளை பெற்ற அப்பாவே ஆணவக் கொலை செய்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close