[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

பறவை முட்டையை உடைத்த சிறுமி : வீட்டில் நுழைய முடியாத அவலம் !

5-year-old-banned-from-entering-house-after-she-damaged-eggs-of-a-bird

பறவை முட்டையை உடைத்த சிறுமிக்கு வீட்டில் நுழைய 11 நாட்கள் தடை விதித்த கிராம பஞ்சாயத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. 

ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் உள்ள கிராமம் கோடா. இங்கு கடந்த ஜூலை மூன்றாம் தேதி குஷ்பு என்ற சிறுமி முதன் முதலில் பள்ளிக்கு முதலாம் வகுப்பு சென்றுள்ளார். அதற்காக அங்கிருந்த கோயில் ஒன்றில் ஊர்மக்கள் முன்னிலையில் பூஜை செய்யப்பட்டுள்ளது. பூஜையின் போது கூட்டமாக இருந்ததால் தடுமாறி விழுந்த சிறுமி பறவை ஒன்றின் முட்டையை எதிர்பாராத விதமாக உடைத்துவிட்டார். அது மழையை கணிக்கும் பறவையின் முட்டை என அந்த ஊர் மக்களால் நம்பப்பட்டு வருகிறது. இதனால் குழந்தை முட்டையை உடைத்ததால் தெய்வக்குத்தம் ஆகிவிட்டது, அதை போக்க பரிகாரங்கள் செய்ய வேண்டும் என ஊர் மக்கள் கூறியுள்ளனர்.

பரிகாரமாக சிறுமியை அங்கிருக்கும் கோயில் ஒன்றில் குளிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு கிலோ உப்பு, ஒரு லிட்டர் வாசனை திரவியம், ஒரு வகை மீன், மதுபாட்டில்கள் ஆகியவற்றை படைக்க வேண்டும். பின்னர் பசு மாடுகளுக்கு உணவளிக்க வேண்டும். புறாக்களுக்கு உணவளிக்க வேண்டும். அத்துடன் குழந்தையை 8 நாட்கள் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இதைக்கேட்ட சிறுமியின் தந்தை, கடுமையாக எதிர்த்துள்ளார். அத்துடன் நீண்ட நேரம் வாக்குவதாம் செய்துள்ளார். அவர் செய்த வாக்குவாதத்தால் குழந்தை வீட்டில் நுழைய வேண்டும் என்ற 8 நாட்கள் தடை, 11 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஊரின் பகையை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாமல் சிறுமியின் குடும்பத்தினரும், பரிகாரத்தை செய்து வருகின்றனர். இதனால் கடந்த ஜூலை 3ஆம் தேதி முதல் சிறுமி வீட்டிற்கு அனுமதிக்கப்படாமல் வீட்டிற்கு வெளியே இருக்கும் மரத்தடி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் நேற்று காவல்துறை மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறுமியின் வீட்டில் அனுமதிக்குமாறு சமரசம் பேசியுள்ளனர். ஆனால் கிராம மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சிறுமியை செய்த பாவத்திற்கு, அவரை தூய்மைப்படுத்தவே இவ்வாறு செய்வதாக கிராம மக்கள் வாதம் செய்துள்ளனர். இதையடுத்து விவகாரம் ஊடங்களின் பார்வைக்கு வர, கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில மனித உரிமையை ஆணையம் மற்றும் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாரியம் புகார் அளிக்கவுள்ளனர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close