[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழில் எழுத அனுமதி

prakash-javadekar-ordered-cbse-to-conduct-ctet-exam-in-tamil-and-other-20-language

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் எழுத அனுமதி அளிக்க பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டுள்ளார். 

மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற வேண்டுமானால் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சி.டி.இ.டி) தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தேர்விற்கான மொழித் தேர்வில் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட 17 மொழிகளை மத்திய அரசு நீக்கியுள்ளதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு வரை மொத்தமாக 20 மொழிகளில் தேர்வு எழுதும் வசதி இருந்த நிலையில் தற்போது அதில் இருந்து தமிழ் உள்பட 17 மொழிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதற்கு தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் எழுந்தது. தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளிலும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ-க்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக, இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. 3 மொழி மட்டும் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “4 மாதங்களில் தேர்வு நடத்த வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால், 3 மொழிகளில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close