[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

மனிதாபிமானத்தை கேள்விக் கேட்கும் சாதியக் கொடுமை ! சிறுவர்கள் மீது தாக்குதல்

3-dalit-children-abused-for-using-upper-caste-well

மகாராஷ்‌டிரா மாநிலம் ஜல்கான் பகுதியில் மாற்று சாதியினரின் கிணற்றில் குளித்த காரணத்திற்காக மூன்று தலித் சிறுவர்களை அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்‌டிரா மாநிலம் வல்கடி கிராமத்தில் கிணறு ஒன்று உள்ளது. வழக்கமாகவே இந்த கிணற்றை உயர் சாதியினர் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இந்நிலையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் இந்த கிணற்றில் குதித்து நீச்சல் அடித்து குளித்துள்ளனர். கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால்  உடலின் வெப்பத்தை தணிக்க அவர்கள் இந்த கிணற்றில் குளிர்ச்சிக்காக குளித்துள்ளனர். இதனைக் கண்ட மாற்று சாதியினர் ஆத்திரம் அடைந்திருக்கின்றனர். உடனே சிறுவர்கள் மூவரையும் வெளியே இழுத்துள்ளனர். பின்னர் அவர்கள் மூவரின் ஆடைகளையும் களைந்து, வீதியில் அழைத்துச் சென்று நிற்க வைத்து பெல்ட்டால் கடுமையாக தாக்கியுள்ளனர். ஜூன் 10ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் சமூக வலைதளத்தின் மூலமாக தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக மகாராஷ்டிர அமைச்சர் திலீர் காம்ளே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close