[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

70 லட்சம் பேர் ஆண்டுதோறும் உயிரிழப்பு: அதிர்ச்சித் தகவல்

air-pollution-kills-7-million-people-each-year-who

காற்று மாசு காரணமாக உலகம் முழுவதும் 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளில் சுமார் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டு இருந்ததை விட, தற்போது 50 சதவிகிதம் அளவுக்கு காற்று மாசு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. காற்று மாசு ஏற்படுவதன்  மூலம் இருதய நோய், முடக்குவாதம், நுரையீரல் புற்றுநோய் ஆகியவை காரணமாக உயிர்பலி அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 இல் ஒன்பது பேர் மாசடைந்த காற்றை சுவாசித்து உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

எனவே இந்த ஆய்வின் மூலம் உலக நாடுகள் காற்று மாசை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் 2.5 அடர்த்தியுள்ள நுண் துகள்களின் அடிப்படையில் மாசு மிகுந்த நகரங்களின் பட்டியலை உலக சுகாதா‌ர நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் உலகின் மிகவும் மாசமடைந்த 20 நகரங்களின் ப‌ட்டியலில் 14 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை என்ற அதிர்ச்சியான தகவலலும் வெளியாகியுள்ளது. 

இந்த ப‌ட்டியலில் கான்பூர்  முதலிடத்தை பிடித்துள்ளது. இது போக டெல்லி, வாரணாசி, ஃபரிதாபாத், கயா, பாட்னா, ஆக்ரா, முஸாபர்பூர், ஸ்ரீநகர், ஜெய்ப்பூர், பாட்டியாலா, ஜோத்பூர் உள்ளிட்ட நகரங்களில் இதில் இடம்பிடித்துள்ளன.‌‌ தலைநகர் டெல்லியில் 2‌014 வரையிலான காலகட்டத்தில் காற்று மாசு குறைந்திருந்தாலும் 2015ஆம்‌ஆண்டுக்கு பிறகு மீண்டும் மோசமடைய தொடங்கி இருப்பது இந்த அறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close