[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

அம்பேத்கருக்கு பதில், தேஷ்முக் புகைப்படம்: மகாராஷ்ட்ராவில் சர்ச்சை

maha-govt-withdraws-magazine-with-wrong-ambedkar-photo

மகாராஷ்டிரா அரசு நடத்தி வரும் ஆங்கில பத்திரிகையில் அம்பேத்கரின் புகைப்படத்துக்குப் பதிலாக முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் புகைப்படம் அச்சிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு நடத்திவரும் 'Maharashtra Ahead' என்ற மாத பத்திரிகையில் அம்பேத்கரின் தொடர் வெளியாகி வருகிறது. இதில் அவரின் சிறுவயது புகைப்படத்துக்குப் பதிலாக முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டது.

சுமார் 7 ஆயிரம் பிரதிகள் தயாரான நிலையில் இந்த தவறு தெரியவந்தையடுத்து விற்பனை உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனால் 600 பிரதிகள் முன்னதாகவே விற்பனையானது பின்னர் தெரியவந்தது. இணையதளத்தில் அம்பேத்கரின் சிறுவயது புகைப்படத்தை தேடும் போது விலாஸ்ராவ் தேஷ்முக்கின் சிறுவயது புகைப்படமும் சேர்ந்து வந்ததால் இந்த தவறு நடந்ததாக தெரியவந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close