[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

தலையில் காயம்; ஆனால் காலில் துளைப்போட்டு ஆபரேஷன் செய்த டாக்டர்

delhi-doctor-performs-leg-surgery-on-a-wrong-patient

டெல்லியில் தலையில் காயம் என சென்றவருக்கு காலில் அறுவை சிசிக்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோயாளி யார் என தெரியாமலேயே மருத்துவம் பார்த்த மருத்துவரால், நோயாளியின் உறவினர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

டெல்லியில் சுஷ்ருதா ட்ராமா மையம் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. டெல்லி அரசாங்கத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைதான் இது. இங்கு தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட சிறிய காயத்திற்காக விஜேந்திர தியாகி என்பவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே வார்டில் வேறு ஒரு நபரும் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு காலில் காயம். அந்த நபருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வந்த டாக்டர், நோயாளி யார் என்றே தெரியாமல் விஜேந்திர தியாகிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்துவிட்டார். நன்றாக இருந்த காலில் துளைபோட்டு ஒரு ஊசி ஒன்றை சொருகி நோயாளி யார் என தெரியாமலேயே அறுவை சிசிக்சையை செய்திருக்கிறார் அந்த மருத்துவர். மயக்க மருந்து போட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் நோயாளிக்கும் அதுகுறித்த எந்த விவரமும் தெரியவில்லை. தலையில் காயம் என்று சென்றால் காலில் அறுவை சிசிக்சை செய்துவிட்டார்களே..? என பதட்டமடைந்த விஜேந்திர தியாகியின் மகன் அதுகுறித்து மருத்துவரிடம் முறையிட்டிருக்கிறார். பின்னர் 1 மணி நேரத்திற்குள் மீண்டும் அந்த நபருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த மருத்துவமனை கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட பிரச்னை குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மருத்துவர் மேற்பார்வை இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதனிடையே விஜேந்திர தியாகியின் மகன் கூறும்போது, “எனது தந்தைக்கு இன்னும் தலை மற்றும் நெஞ்சுப்பகுதியில் காயம் உள்ளது. ஆனால், மருத்துவர் தெரியாமல் காலில் சிகிச்சை செய்துள்ளார். இதனால் அவரால் இப்பொழுது நடக்கவும் முடியவில்லை. தவறு செய்த மருத்துவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close