[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

பாலியல் வன்கொடுமைக்கு ஆதரவாக கருத்து: இளைஞரின் வேலையை பறித்தது வங்கி!

banker-loses-job-after-comment-on-kathua-rape-case

கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட வங்கி உதவி மேலாளர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டா ர். இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டனக் குரல்கள் பலமடைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டும் என பலர் கோரிக்கை வைத் து வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் கோடக் மகேந்திரா வங்கியின் உதவி மேலாளராக இருந்த விஷ்ணு நந்தகுமா ர், முகப்புத்தகத்தில் பரபரப்புப் பதிவு ஒன்றை வெளியிட்டார்.  அதில், ‘ இந்த வயதிலேயே ஆசிஃபா கொல்லப்பட்டது நல் லது. இல்லை என்றால் அவள் வளர்ந்து இந்தியாவுக்கு எதிராக குண்டு வீசுபவளாக மாறியிருப்பாள்’ என்று கூறியிருந் தார். இதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. இவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந் தன. 

‘விஷணுவை வெறுக்கிறோம். உங்கள் வங்கியில் பணியாற்ற  தகுதியற்றவர் அவர். நல்ல மனம் உள்ளவர்கள் வெளியே அதிகமானவர்கள் இருக்கிறார்கள். அவருக்கு வேலை கொடுங்கள்’ என்றும் ’குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வதை ஆதரிப்பவர்களையா வேலையில் வைத்திருக்கிறீர்கள்? இதுதான் உங்கள் நோக்கமா? இவரை
உடனடியாக வெளியேற்றுங்கள். உங்க நிறுவனப் பெயரைக் காப்பாற்றுங்கள்’ என்றும் கூறியிருந்தனர். ட்விட்டரிலும் இந்தக் குரல் எதிரொலித்தது.

இதையடுத்து கோடக் மகேந்திரா வங்கி நிறுவனம், விஷ்ணு நந்தகுமாரை வேலையில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.  
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close