[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டிங்
  • BREAKING-NEWS அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: புக்கத்துறையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
  • BREAKING-NEWS கிராம பஞ்சாயத்து ஊற்று போன்றது; கவனமின்றி இருந்ததால் சாக்கடை கலந்துவிட்டது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கூட்டு தேடி அலைய வேண்டிய நிலையில் அதிமுக எப்போதும் இல்லை- நமது அம்மா நாளிதழ்
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி
  • BREAKING-NEWS மே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி

ஆசிஃபாவுக்கு இழைக்கப்பட்ட அடுக்கடுக்கான அநீதிகள் என்ன? 

a-timeline-of-kathua-s-horrific-gang-rape-murder-of-an-8-year-old-that-s-burning-the-nation-today

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி காவல்துறையினர் உட்பட 8 பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. சிறுமி ‘ஆசிஃபா’வுக்கு நீதி கேட்டு #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

ஜனவரி 10: குதிரையை தேடிச்சென்ற 8 வயதே ஆன சிறுமி ஆசிஃபா கடத்தப்படுகிறாள்

ஜனவரி 12: சிறுமியின் தந்தை யூசஃப், ஹீரா நகர் காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளிக்கிறார். காவல்துறையினர் முதலில் இந்த வழக்கை விசாரிக்க மறுத்துள்ளனர். சிறுமி யாருடனாவது சென்றிருப்பாள் என காவல்துறை கூறியுள்ளது.இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனவரி 17: சிறுமி ஆசிஃபா காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கிராம மக்கள் காவல்துறைக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஜனவரி 22: வழக்கை மாநிலக் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றி ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 8பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் 15வயது சிறுவனும் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சஞ்சி ராம் (வயது 60) இச்சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர். இவரது மகன் விஷால், இவரது உறவினர் ஒரு சிறார், சிறப்பு காவல்பிரிவு அதிகாரிகள் தீபக் காஜூரியா, சுரிந்தர் குமார், ரசானா கிராமத்தை சேர்ந்த பர்வேஷ் குமார். துணை காவல் ஆய்வாளர் ஆனந்த் தத்தா மற்றும் தலைமை காவலர் திலக் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

பிப்ரவரி 14: இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சி ராம் என்பவரை விடுவிக்க கோரி ‘இந்து ஏக்தா மஞ்ச்’என்ற அமைப்பு ஜம்மு நகரில் தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடத்தியது. இந்த வழக்கில் கைதானவரை விடுவிக்க வேண்டும் என அம்மாநில பாஜக அமைச்சர்கள் இருவர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

குற்றவாளிகள் விவரம்

சஞ்சி ராம் : ஓய்வு பெற்ற வருவாய்துறை அதிகாரி, இவர் இந்தக் குற்றச்சம்பவத்தில் மூளையாக செயல்பட்டுள்ளார். சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த கோயிலை இவர்தான் நிர்வகித்து வருகிறார்.


 
15வயது சிறுவன்:
சஞ்சி ராமின் திட்டத்தை முன்னின்று செயல்படுத்தியுள்ளான். இவன் தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டான்.

பர்வேஷ் குமார்: 15வயது சிறுவனின் நண்பன். சிறுமியைக் கடத்துவதற்கு உதவிபுரிந்துள்ளான்.

விஷால்: ராமின் மகன் மீரட்டில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறான். 15வயது சிறுவன் தொலைபேசி மூலம் விஷாலை அழைத்து சிறுமி
கடத்தப்பட்டதாகவும் , பாலியல் வன்கொடுமை செய்யும் ஆசை இருந்தால் வருமாறும் அழைத்துள்ளான். இதனையடுத்து இவனும் இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டுள்ளான்.

தீபக் காஜுரியா: சிறப்பு காவல்துறை அதிகாரி. 15 வயது சிறுவன், ஆசிபாவை கொலை செய்யும் முன் தடுத்து, மயக்க நிலையில் இருந்த அவளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்

சுரிந்தர் குமார்: சிறப்பு காவல்துறை அதிகாரி. இந்தக் குற்றச்சம்பவத்தை கண்ணால் பார்த்தவர் , தீபக்கின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தவர். 

ஆனந்த் தத்தா : துணை காவல் ஆய்வாளர். இந்தச் சம்பவத்தை விசாரிக்க சென்று விசாரணை அதிகாரி. முழு சம்பவமும் எப்படி நடக்கிறது என அறிந்தும், பணத்திற்காக எதையும் செய்யாமல் குற்றத்தை மறைக்க முயற்சித்தற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

திலக் ராஜ்: தலைமை காவலர். இந்தச் சம்பவத்தை விசாரிக்க சென்று விசாரணை அதிகாரி. சஞ்சி ராமுக்கும் ஆனந்த் தத்தாவுக்கும் இடைத்தரகராக செயல்பட்டவர். 3 லட்சம் வரை பணம் பெற்று,  குற்றத்தை மறைக்க முயற்சித்தற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

(ஆனந்த் தத்தா மற்றும் திலக் ராஜ் இருவரும் சிறுமியின் ஆடைகளை சுத்தம் செய்து குற்றத்தை மறைக்க முயற்சித்துள்ளனர் )

ஏப்ரல் 12: மனிதர்களாக தோற்றுவிட்டோம். அவருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

ஏப்ரல் 12: காஷ்மீரின் கத்துவா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் ஆகிய பகுதிகளில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தலைநகர் டெல்லியில் மெழுகுவத்தி ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

ஏபரல் 13: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் , சஞ்சி ராமுக்கு ஆதராவாக வழக்கறிஞர்கள் செயல்பட்டதை அறிந்து கொண்ட உச்சநீதிமன்றம், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அம்மாநில பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close