[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

1 வருடமாக அம்மா- மகனை பூட்டி வைத்த வளர்ப்பு மகன்! லூதியானாவில் அதிர்ச்சி!

woman-son-locked-in-home-for-around-a-year-rescued

ஒரு வருடமாக வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த அம்மாவும் மகனும் மீட்கப்பட்டுள்ளனர். 

லூதியானாவில் உள்ள துங்கிரி சிஆர்பிஎப் காலனியில் வசித்தவர் சுதா (38). இவரது கணவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஏழு வயதில் மகன் ஒருவன் இருக்கிறான். கணவர் இறந்த பின் மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது. சுதாவுக்கு. இவரை இவர்கள் வளர்ப்பு மகன் சுரேஷ்குமார் (30) கவனித்து வந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் லூதியானா மாவட்ட சட்ட அமைப்புக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், ஒரு வருடமாக அம்மாவும் மகனும் வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து மனநல மருத்துவர், மாஜிஸ்திரேட் குர்பிரீத் கவுர் மற்றும் சமூக நல அமைப்பினர் அந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு நிர்வாண கோலத்தில் படுத்திருந்தார் சுதா. மற்றொரு அறையில் எதுவும் பேசாமல் உம்மென்று இருந்துள்ளான் சிறுவன். 

இருவரையும் மீட்ட அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களுக்கு சுரேஷ்குமார் எப்போதாவதுதான் சாப்பாடு கொடுப்பாராம். தந்தை இறப்பதற்கு முன் வரை, அந்தச் சிறுவன் சந்தோஷமாகப் பள்ளிக்குச் சென்றுவந்துள்ளான் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். 

‘நாங்கள் வீட்டுக்குள் சென்றதும் சுதா, தனது கணவரின் பெயரைச் சொல்லி அழைத்தார். பின்னால் வாருங்கள் என்றார். இதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. சிறுவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இருவருக்கும் உணவு கொடுத்ததும் நன்றாகச் சாப்பிட்டனர். இவர்களை வீட்டுக்குள் பூட்டி வைத்த சுரேஷ் குமாரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல்தான் இருக்கிறார். மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க சமூக நல அமைப்புகளிடம் பேசி வருகிறோம்’ என்றார் மாஜிஸ்திரேட் கவுர். 

மருத்துவர்கள் கூறும்போது, ‘சுதா மற்றும் சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. சுதாவால் எழுந்து நிற்க முடியவில்லை. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்’ என்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close