[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

அழிவின் விளிம்பில் தோடர், கோடா மொழிகள்

speak-up-42-languages-near-extinction

இந்தியாவில் அழியும்‌ நிலையில் 40க்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக மத்திய அ‌ரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் அரசியலமைப்புரீதியில் அங்கீகரிக்கப்பட்ட 23 ஆட்சி மொழிகள் உள்ளன. மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் பேசப்படும் மொழிகளை அதிகாரப்பூர்வ மொழிகளாக பயன்படுத்துகின்றன. இந்நிலையில் இந்தியாவில் அழியும்‌ நிலையில் 40க்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக மத்திய அ‌ரசு தெரிவித்துள்ளது. 

யுனெஸ்கோ அமைப்பும் இது தொடர்பன பட்டியல் ஒன்றை தயார்‌ செய்துள்ளது. அதில், தமிழகத்தில் பேசப்படும் தோடர், கோடா மொழிகள் மற்றும் கர்நாடகாவில் பேசப்படும் குருபா மொழி, ஆந்திராவில் பேசப்படும் கடபா, நாய்கி ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன.‌‌ மணிப்பூரில் பேசப்படும் ஏய்மோல், கோய்ரென், லாம்காங், லாங்ரோங், புரம் மற்றும் தாரோ ஆகிய 7 மொழிகளும், இமாச்சல் பிரதேசத்தில் பயன்பாட்டில் உள்ள பகஹதி, ஹன்டுரி, பங்வாளி மற்றும் சிர்மாயுடி ஆகிய 4 மொழிகளும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. 

மேலும் அசாமில் பேசப்படும் டை நோரா, பான்கணி (உத்தரகண்ட்), பிர்ஹோர் (ஜார்கண்ட்), நிஹலி (மகாராஷ்டிரா), ருகா (மேகாலயா) மற்றும் டோட்டோ (மேற்கு வங்கம்) ஆகியன அழிவின் விளிம்பில் உள்ள மொழிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close