[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

விதவை தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்!

a-young-woman-has-got-her-widowed-mother-married-despite-opposition-from-society-and-family

ராஜஸ்தானில் தனது விதவை தாய்க்கு மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்துவைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த கீதா அகர்வால் 53 வயது நிரம்பியவர். இவரின் கணவர் முகேஷ் குப்தா மாரடைப்பு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கீதாவின் இளைய மகள் சன்ஹிடா வேலை காரணமாக ஜார்கண்ட் சென்றுவிட்டார். பின்னர் தனது தாயை தனிமையில் விட்டு வந்துவிட்டோம் என வருந்திய அவர், தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். அத்துடன் தனது தாயின் தகவல்களை திருமண வலைதளத்திலும் பதிவு செய்தார்.

இதையடுத்து ஜெய்பூர் வந்த சன்ஹிடா, தனது தாயிடம் இந்த விஷயத்தை கூறினார். இதைக்கேட்டு பயந்த கீதா மறுப்பு தெரிவித்தார். அத்துடன் சன்ஹிடாவின் அக்கா சக்‌ஷியும் இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாரம்பரிய வழக்கத்தை கொண்ட கீதாவின் குடும்பத்தினரும் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இருப்பினும் மனம் தளராத சன்ஹிடா தொடர்ந்து பேசி தனது தாயை ஒப்புக்கொள்ளச்செய்யும் முயற்சியை மேற்கொண்டார். 

இந்நிலையில் ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் கே.ஜி.குப்தா என்பவர், சன்ஹிடாவின் திருமண பதிவிற்கு விருப்பம் தெரிவித்தார். அவரை சன்ஹிடா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, கே.ஜி.குப்தாவின் மனைவி கடந்த 2010ஆம் ஆண்டு கேன்சர் நோயின் காரணமாக உயிரிழந்தார் என்பதும், அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த சன்ஹிடா, ஒருவழியாக தனது தாயை சமாதானம் செய்துள்ளார். இதையடுத்து திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட கீதா அறுவை சிகிச்சை மூலம் தனது கருப்பையை நீக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து திருமணமும் நடைபெற்று தற்போது கீதா-குப்தா ஆகியோர் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது தாயின் முகத்தில் சமீப காலமாக சிரிப்பை காண முடிவதாக சன்ஹிடா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close