[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
  • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
  • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
  • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
  • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
இந்தியா 30 Nov, 2017 08:13 AM

ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக தனிப் பேருந்து: கேரள அரசு சிறப்பு ஏற்பாடு

ksrtc-operates-special-service-inconnection-with-mandalapooja-makaravilakku-2016-17-from-various-depots

சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்களின் வசதிக்காக கேரள போக்குவரத்துக்கழகம் சிறப்பு ஏற்பாட்டினை அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்றுவருவதால் அவர்களுக்காக சிறப்புப் பேருந்துகளை கேரள அரசு இயக்கி வருகிறது. சபரிமலையில் இருந்து கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் வழிபாடு நடத்திய பின்னர் 40 பக்தர்கள் ஒன்றிணைந்து கேட்டால் அவர்களுக்காக குறைந்த கட்டணத்தில் தனிப்பேருந்து இயக்கவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

அதற்காக பேருந்தின் மொத்த கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளன. பம்பையில் இருந்து குமுளிக்கு 8,700 ரூபாய், பழனிக்கு 21,550 ரூபாய், தென்காசிக்கு 12,900 ரூபாய், கோவைக்கு 24,800 ரூபாய், கன்னியாகுமரிக்கு 19,880 ரூபாய், மதுரைக்கு 19,300 ரூபாய் கட்டணத்தில் தனி பேருந்துகள் இயக்கப்படும் என கேரள அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழகத்தின் பிற நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஒரே பேருந்தில் பயணித்து, சிரமம் தவிர்க்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விபரங்களுக்கு பம்பையில் உள்ள கேரள அரசு போக்குவரத்துக்கழக தகவல் மையத்தை 04735 - 203445 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close