[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்
  • BREAKING-NEWS மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்: ஹர்திக் படேல்
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
இந்தியா 05 Oct, 2017 11:44 AM

மீசை முறுக்கும் போராட்டத்தில் தலித் இளைஞர்கள்!

will-grow-moustache-and-twirl-it-too-gujarat-dalit-s

குஜராத்தில், தலித் இளைஞர்கள் மீசை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல் சாதியினர் நடத்திய தாக்குதலை அடுத்து, மீசை முறுக்கும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

குஜராத்தில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் பியூஷ் பர்மார் (24). தலித் பிரிவைச் சேர்ந்த இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் கம்பீரமாக முறுக்கு மீசையுடன் அலைவார். இது, உயர் சாதி இளைஞர்கள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு அவரை, உயர் சாதி இளைஞர்கள் சிலர் தாக்கியுள்ளனர். பியூஷின் உறவினருக்கும் அடி உதை விழுந்துள்ளது. இதையடுத்து,அதே கிராமத்தில் கிருனாஸ் மகேரியா என்ற 30 வயது தலித் இளைஞரை தாக்கிய உயர்சாதி கும்பல், அடித்து உதைத்து, மீசையை துண்டித்து அவமானப்படுத்தியது.
 
இதையடுத்து தலித் இளைஞர்கள் அகமதாபாத் மற்றும் காந்திநகர் மாவட்டங்களில் ‘ட்விட்டர்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மீசையால் ஏற்பட்ட அவமானம் குறித்து பிரசாரம் செய்தனர். அப்போது மீசையை முறுக்கி விட்டபடி செல்பி எடுத்து போட்டோவை வெளியிட்டனர். ‘மீசை வளர்ப்பது எங்களின் அரசியல் உரிமை’ என அதில் பதிவு செய்தனர். இதையடுத்து முறுக்கிய மீசையுடன் கூடிய புகைப்படத்தை  'வாட்ஸ் ஆப்-பில் பரப்பும் போராட்டத்தில், தலித் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். 'மிஸ்டர் தலித்' என்ற பெயரில், மீசையை முறுக்கும் படங்களை, பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பரப்பி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close