[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

தாய்ப்பால் கொடுக்க மறுப்பது குழந்தைகள் உரிமை மீறல் - யுனிசெப்

to-get-mothers-milk-is-childs-rights

தாய்ப்பால் கொடுக்க மறுப்பது குழந்தைகளின் உரிமை மீறலாகும் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்டு 1ல் இருந்து 7ந்தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தாய்ப்பால் கொடுக்கும் வழக்கத்தை குடும்பங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஐ.நா. அமைப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில், கேரளா மற்றும் தமிழகத்திற்கான யுனிசெப் அமைப்பின் தலைவர் ஜாப் ஜக்காரியா கூறும் பொழுது, தாயாரிடம் இருந்து தாய்ப்பாலை பெறுவது குழந்தைகளின் உரிமை. அது அவர்களது வாழ்வு மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது என கூறியுள்ளார். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுப்பது என்பது குழந்தைகளின் உரிமையை மீறுவது ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களில் பெருமளவிலான தாயார்கள் நீர், பால் பொருட்கள் மற்றும் பிற உணவு அல்லது திரவங்களை கொடுத்து வருகின்றனர். இந்த நடைமுறை குழந்தைகளுக்கு நல்லதல்ல என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்தால் குழந்தைகள் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்தில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தல் மற்றும் குழந்தை பிறந்து முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுத்தல் ஆகியவை குழந்தைகளின் உடல்நலனுக்கு சிறந்தது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close