[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

ராஜீவ் கொலை சதி கதையில் ராணா!

rana-as-investigation-officer-in-rajiv-gandhi-assasination

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை சதி சம்பவத்தை ’மனித வெடிகுண்டு’ என்ற பெயரில் சினிமாவாக இயக்குகிறார் ஏ.எம்.ஆர்.ரமேஷ். இவர் ஏற்கனவே, குப்பி, காவலர் குடியிருப்பு, வனயுத்தம், ஒரு மெல்லிய கோடு படங்களை இயக்கியவர்.
 
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. உண்மை சம்பவக் கதை என்பதால் ராஜீவ் காந்தி கொலையில் சிறப்புப்புலனாய்வு அதிகாரியாகச் செயல்பட்ட கார்த்திகேயன் கேரக்டரில் நடிக்க, பல்வேறு நடிகர்களைத் தேடி வந்தனர். இப்போது அதில் ராணா நடிக்கிறார் என்று தெரிகிறது.

இதுபற்றி இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறும்போது, ‘இந்தப் படத்துக்காக இலங்கை, அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுக்கு சென்று தரவுகள் சேகரித்திருக்கிறேன். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் சிலருடன் பேசியிருக்கிறேன். அதோடு உயர் போலீஸ் அதிகாரிகள் கொடுத்த தகவல்களையும் கொண்டு ஆராய்ச்சி செய்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறேன்’ என்றார்.

இதில் ராணா நடிப்பது பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. சிவராசனாக கன்னட நடிகர் ரவிகாளே நடிக்க இருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Rana Rajiv Gandhirajiv gandhi rana
Advertisement:
Advertisement:
[X] Close