[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

உணவு உற்பத்திக்கான எவ்வித அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை : ப.சிதம்பரம் கருத்து

budget-political-not-surprised-says-p-chidambaram

உணவு உற்பத்திக்கான எவ்வித அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டு வந்த திட்டங்கள் தொடரப்படுவது மகிழ்ச்சி அளித்தாலும் அனைத்து துறையினருக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே பட்ஜெட் அமைந்துள்ளதாக ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கூறியதாவது:

வரி செலுத்துவோர், நடுத்தர வகுப்பினர், சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு எவ்வித சலுகையும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. கார்ப்பரேட் வரி 30 சதவிகிதத்தில் இருந்து 29ஆக குறைக்கப்பட்டுள்ளது நகைப்பூட்டுகிறது. அது மட்டுமல்லாமல் புது வரிகளும் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பெரிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் இந்த பட்ஜெட் ஏமாற்றியுள்ளது என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close