[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.

பணத்திற்கு ஆசைப்பட்ட 16 வயது பையன்... 3 வயது சிறுமியைக் கொலை செய்த கொடூரம்

in-mumbai-3-years-old-girl-killed-by-2-teenager

மூன்று வயதுச் சிறுமியை 16 வயதே நிரம்பிய இருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு கொலை செய்த சம்பவம் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5-ஆம் தேதியிலிருந்து தங்களது 3 வயது பெண் குழந்தையை காணவில்லை என ஜே.ஜே.மார்க் காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர். மும்பை புறநகரான காஜிபுரா பகுதியில் சனிக்கிழமை இரவு அந்தக் குழந்தையின் சடலத்தை கண்டெடுத்தனர். விசாரணையில், குழந்தையின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த 16 வயது இளைஞர் ஒருவரும், அவரது நண்பரும் இணைந்து அந்தக் குழந்தையை கடத்திச் சென்று, பின்னர் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சிறுமியைக் கடத்திய இளைஞர்கள், அவளை விடுவிக்க 1 கோடி ரூபாய் கேட்டு சிறுமியின் பெற்றோருக்கு தொலைபேசியில் பேசியுள்ளனர். பெற்றோர் தரப்பில் இருந்து அவ்வளவு பெரிய தொகையை தங்களால் தர இயலாது என்று கூறியுள்ளனர். தொடர்ந்து பேரம் பேசிய இளைஞர்கள் இறுதியாக 28 லட்சம் ரூபாய் பெற ஒத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அந்த பணத்தை கல்வா பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே போட்டு விட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறையினரோடு அந்த இடத்துக்கு சென்றனர் போலீசாரை கண்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.

காவல்துறையினர் அந்த சிறுமியின் வீடு அமைந்துள்ள பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் 1௦ பேரை பிடித்து விசாரித்ததில் அந்த இளைஞர்கள் சிறுமியை கடத்தியதை ஒப்புக்கொண்டனர். இளைஞர்கள் சிறுமியை கடத்த குளோரோபார்ம்மை கொடுத்துள்ளனர்.அப்போது அதன் அளவு அதிகமான காரணத்தால் சிறுமியின் மூக்கில் இருந்து இரத்தம் வந்துள்ளது இதையடுத்து சிறுமி மயக்கமடைந்தாள். இந்நிலையில் செய்வது அறியாது அந்த இளைஞர்கள் செல்போன் வயரை கொண்டு குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டனர். சடலத்தை அவர்களது குடியிருப்புக்கு அருகில் பாலீதீன் பையில் சுற்றி மறைத்து வைத்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் படி சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close