[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

தேசிய நெடுஞ்சாலைகள் நீளம் அதிகரிக்கப்படும்

increase-the-length-of-national-highways

தேசிய நெடுஞ்சாலைகள் நீளம் 96,000 கி.மீட்டரிலிருந்து 2,00,000 கி.மீ நீளமாக அதிகரிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் 77 வது வருடாந்திர மாநாட்டில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகின்றன எனவும் மாநில நெடுஞ்சாலைகள் அந்தந்த மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார். தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் தற்போதுள்ள 96 ஆயிரம் கிலோ மீட்டரில் இருந்து 2 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்த கட்கர், இன்று 1,65,000 கி.மீ வரை நீளமுள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close