[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

சுஷ்மா சுவராஜ் விரைவில் வீடு திரும்புவார்... டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

aims-doctor-s-tells-about-sushma-swaraj-health

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடல்நிலை நன்கு தேறி வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுநீ‌ரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடல்நிலை நன்கு தேறி வருவதாகவும், அவர் இன்று அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 64 வயது நிரம்பிய சுஷ்மா சுவரா‌ஜிற்கு கடந்த சனிக்கிழமையன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை எதிர்பார்த்தபடியே சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு வருவதாக எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் எம். சி. மிஸ்ரா தெரிவித்துள்ளார். அடுத்த 10 நாள்களுக்குள் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் அவர்‌ தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close