[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் கடும் பனிமூட்டம்... ரயில், விமான சேவைகள் பாதிப்பு

dense-fog-cover-shrouds-the-national-capital-visibility-affected

கடும் பனிமூட்டம் காரணமாக தலைநகர் டெல்லியில் ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லி‌ மற்றும் உத்தரபிரதேசம், ‌அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் சில மீட்டர் தொலைவில் வரும் வாகனங்கள் கூட தெரியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலையும் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், 9‌4 ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன. மேலும், 15 ரயில் சேவைகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஒரு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 6 ‌சர்வதேச விமானங்களும், 7 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. ஒரு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து சேவைகள் மட்டுமின்றி, நடைபாதைகளில் வசிக்கும் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close