[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கட்டுமான நிறுவனத்தில் வருமா‌ன ‌வரித்துறையினர் அதிரடி சோதனை.. ரூ.152 கோடி பறிமுதல்

income-tax-raid-in-bangalore

சென்னை, கோவை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.152 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை‌, கோவை, ஈரோடு, பெங்களூரு ஆகிய ஊர்களில் 10க்கும் மேற்பட்‌ட இடங்களில் ‌கடந்த இரண்டு நாட்களாக வருமான‌ வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட தனியார் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் போது கணக்கில் வராத 152 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட தொகையில் 5 கோடியே 70 லட்சம் ரூபாய் புதிய 2 ஆயிரம் நோட்டுகள் என்றும், புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் இவ்வளவு அதிக மதிப்பிலான கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டது இதுவே முதல் முறை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சோதனையில் 7 கிலோ தங்கக் கட்டி‌களும், 9 கிலோ நகைகளும் கைப்பற்ற‌ப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close