[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

'ஜல்லிக்கட்டு திருவிழா கால விளையாட்டு'.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

jallikattu-is-traditional-game-not-enterdainment

ஜல்லிக்கட்டு பொழுதுபோக்கு விளையாட்டோ, பந்தயமோ அல்ல என்றும், அது திருவிழா கால பாரம்பரிய விளையாட்டு என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணை குறித்து மாறுபட்ட கருத்து இல்லை என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், அதில் நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளதா என்பது பற்றியே தங்களது ஐயம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹிண்டன் நாரிமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஜல்லிக்கட்டுக்காக பிறப்பித்த அரசாணை குறித்த விளக்கங்களோடு, மத்திய அரசு தனது வாதத்தை முன்வைத்தது. அப்போது, ஜல்லிக்கட்டு தொடர்பாக 2014ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை என மத்திய அரசு கூறியது. சில நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. காளைகளுக்கு எந்தவித துன்புறுத்தலோ, வலியோ ஏற்படாத வண்ணம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்து அரசாணை வெளியிட்டதாகவும் மத்திய அரசு தனது வாதத்தில் கூறியது.

ஜல்லிக்கட்டு என்பது பொழுதுபோக்கு விளையாட்டோ, பந்தயமோ அல்ல என்றும் மத்திய அரசு தெரிவித்தது. ஜல்லிக்கட்டு 2 ஆயிரம் ஆண்டுகளாக நடைபெறும் பாரம்பரிய விளையாட்டு என்றும், ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் திருவிழா கால விளையாட்டு என்றும் மத்திய அரசு கூறியது. பால் கறக்கும்போது மாடுகள் துன்புறுகின்றன என்றும், அதற்காக நாம் பால் கறக்காமல் இருப்பதில்லை என்றும் மத்திய அரசு வாதிட்டது. இதன்பிறகு கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசின் அரசாணையை பற்றி எந்தவித கேள்வியும் எழுப்பவில்லை எனக் கூறினர். மேலும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு பிறப்பித்த அரசாணையில் நிபந்தனைகள் இடம்பெற்றிருக்கிறதா என்பதே தங்களது கேள்வி என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close