[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

உத்தரப் பிரதேசத்தில் பனிமூட்டத்தால் நேர்ந்த விபரீதம்...... அடுத்தடுத்து 12 கார்கள் மோதி விபத்து

continuously-12-cars-accident-in-uttarpradesh

உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து 12 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் படுகாயமடைந்தனர்.

வடமாநிலங்களில் பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

டெல்லி - லக்னோ நகரங்களை இணைக்கும் யமுனா அதிவிரைவுச் சாலையில் மதுரா அருகே போதிய வெளிச்சமின்மையால் 12 கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. அதேபோல, சானா - குருகிராம் நெடுஞ்சாலையிலும் பனிமூட்டத்தால் நான்கு கார்கள், இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளாகின. பனிமூட்டம் நீட்டிக்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் சாலையில் பயணிக்குமாறு டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close