[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

நக்ரோட்டா தாக்குதல் எதிரொலி... ஜம்முவில் தீவிர கண்காணிப்பு

nagrota-terror-attack-security-tightened-in-jammu

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 வீரர்கள் உயிரிழந்த நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கிறார்களா என பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

நக்ரோட்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, பயங்கரவாத தாக்குதல்களுக்கு அதிக வாய்ப்புள்ள இடங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வீரர்களை ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. ஜம்முவின் புறநகர்ப்‌ பகுதியான நக்ரோட்டாவில் ராணுவ முகாம் உள்ளது. இங்கு போலீசாரின் சீருடையில் வந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வீரர்களின் உறவினர்கள் 16 பேரை பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். அவர்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், 2 அதிகாரிகள் உள்பட 7 ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர். துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close