[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ரூபாய் நோட்டு விவகாரம்... எதிர்க்கட்சிகள் இன்று நாடுதழுவிய போராட்டம்

indian-currency-issue-opposition-parties-today-bandh

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, கடந்த 8ஆம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை கண்டித்து, இன்று நாடு முழுவதும், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

பிரதமர் மோடியின் நடவடிக்கையை ஆதரித்துவரும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, போராட்டத்தில் பங்கேற்பதாக கூறியிருந்தது. தற்போது, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ள ஐக்கிய ஜனதாதள கட்சி, இன்றைய போராட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது. இதேபோல, ரூபாய் நோட்டு விவகாரத்தில், மத்திய அரசை தொடர்ந்து எதிர்த்து வரும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இந்த போராட்டத்திற்கு ஆதரவில்லை என அறிவித்துள்ளார். இதனால், திரினாமூல் காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close