[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள்..

parliament-adjourned-till-12pm

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. அப்போதிலிருந்தே, பழைய ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.

இந்நிலையில் இன்றும் மாநிலங்களவை கூடிய போது ரூபாய் நோட்டு பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிகளுக்கிடையே மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விளக்கம் அளித்தார். ஆனால் வெங்கய்ய நாயுடுவின் விளக்கத்தை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து விட்டனர். பிரதமர் மோடி அவைக்கு நேரில் வந்து எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்கை மாநிலங்களவையில் பேச அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற அவைத் தலைவர் மன்மோகன் சிங் பேச அனுமதி அளித்தார். ஆனால் அப்போதும் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதே போன்று மக்களவையிலும் ருபாய் நோட்டு பிரச்னையை எதிர்க்கட்சியால் தொடர்ந்து எழுப்பியதால் மக்களவையும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close