[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

வங்கிகளில் பணம் மாற்ற வருபவர்களுக்கு கை விரலில் மை..

indelible-ink-mark-concept-to-start-today-in-major-cities-economic-affairs-secy-shaktikanta-das

வங்கிகளில் பணத்தை மாற்ற வருபவர்களுக்கு கை விரலில் அடையாள மை வைக்கப்படும் என சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் ஏடிஎம்-கள் மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. ஆனால் பெரும்பான்மையான ஏடிஎம்-களில் பணம் கிடைக்காததல் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து, பணத்தை பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் வங்கியில் பணத்தை மாற்ற வருபவர்களுக்கு கை விரலில் அடையாள மை வைக்கப்படும் என மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பல்வேறு நபர்கள் மூலம் பணத்தை மாற்ற முயற்சி செய்து வருவதாகவும், ஒரே நபர் அடிக்கடி பணத்தை மாற்ற வருவதால் தான் வங்கிகளில் கூட்டம் அலைமோதுவதாகவும் அவர் தெரிவித்தார். கைவிரலில் அடையாள மை வைப்பது இன்று முதல் பெருநகரங்களில் அமலுக்கு வர உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close