[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

சோனியா பங்கேற்காத காங்கிரஸ் காரிய கமிட்டி..

rahul-gandhi-to-be-congress-leader

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். ராகுல் தலைமை வகித்த முதல் காரிய கமிட்டி கூட்டம் இதுவாகும்.

காங்கிரஸ் காரிய கமிட்டியின் கூட்டம் இன்று டெல்லியில் அதன் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சோனியா காந்தியின் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவரால் பங்கேற்ற இயலவில்லை.

இதனைத்தொடர்ந்து கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். ராகுல் விரைவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவியேற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் இருந்து பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் ராகுல்காந்தி இன்றைய கூட்டத்திற்கு தலைமை வகித்தது கட்சித் தலைவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலம் அடிக்கடி குன்றி வருகிறது. இதனால் ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற மூத்த தலைவர்கள் கருத்து தெரிவிக்கையில், அடுத்தாண்டு சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள‌தால் அதுவரை சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

குறிப்பாக உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் ரிட்டா பகுகுனா ஜோஷி போன்றோர் அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளனர். அதற்கு காரணம் ராகுல் காந்திதான் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வலுவாக உள்ள பாரதிய ஜனதாவை எதிர்கொள்ள சோனியா காந்தியின் அனுபவம் கை கொடுக்கும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. இதனை காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். இதனால் ராகுல் காந்திக்கு வழங்க திட்டமிட்டிருந்த பதவி உயர்வு ஓர் ஆண்டிற்கு தள்ளிப்போயுள்ளது. இந்தகூட்டத்தில் மோடி அரசின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close