[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

cauvery-case-ajdourned

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதேநேரத்தில் நீர் திறப்பது குறித்த விவகாரத்தில் ஏற்கனவே உள்ள உத்தரவு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரள அரசுகள் தொடர்ந்த வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என நேற்று மத்திய அரசு தனது வாதத்தில் கூறியது.

மத்திய அரசின் வாதம் நேற்று முடிவடைந்த நிலையில், மாநில அரசுகள் தங்களுடைய தரப்பு வாதத்தை நீதிபதிகள் முன் இன்று எடுத்துரைத்தன. அப்போது, பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டிப் பேசிய தமிழகம், கர்நாடகம், கேரள அரசுகள், இந்த வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்தன. அதேவேளையில், வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என புதுச்சேரி அரசு தெரிவித்தது.

இவற்றைக் கேட்ட நீதிபதி‌கள், இதுதொடர்பாக வரும் ‌24-ம் தேதிக்குள் 4 மாநில அரசுகளும், மத்திய அரசும் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, காவிரியில் நீர் திறப்பது குறித்த விவகாரத்தில், கர்நாடகா தினமும் விநாடிக்கு 2,000 கனஅடி நீர் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு மீண்டும் தொடரும் என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close