[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

ரயில் நிலையங்களில் இலவச வைஃபை பயன்படுத்துவதில் பாட்னா முதலிடம்

passengers-at-patna-railway-station-use-free-wi-fi-to-search-porn-sites

ரயில் நிலையங்களில் இலவச வைஃபை பயன்படுத்துவதில் பாட்னா ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால் ‘இலவச வைஃபை வசதி மூலம் ஆபாச இணையதளங்களையே அதிகமானோர் பார்த்துள்ளதாக ரயில்டெல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூகுள் இந்தியா மற்றும் இந்திய ரயில்வே இணைந்து இந்தியாவின் 400 முக்கிய ரயில் நிலையங்களில் அதிவேக இலவச வைஃபை இணையசேவையை வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. முதன் முதலில் மும்பை ரயில் நிலையத்தில் இலவச வைஃபை அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பெங்களுரூ, புது டெல்லி, பீகார் தலைநகர் பாட்னா , விசாகப்பட்டினம், ராஞ்சி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் தற்போது வரை 23 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இலவச வைஃபை இணைய வசதி மூலம் பாட்னா ரயில் நிலையத்தில் அதிகமானோர் ஆபாச தளங்களை பார்த்துள்ளதாக ரயில்டெல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இணையசேவை வழங்கும் ரயில்டெல் நிறுவனம் இதுவரை பாட்னா நகரில் ரயில் பயணிகள் பார்த்துள்ள டேட்டாக்களை பதிவு செய்துள்ளது. அந்த தகவல்கள் தொடர்பாக ரயில்டெல் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘பாட்னா ரயில் நிலையத்தில், யூடியூப் அதிகமானோர் பார்க்கின்றனர். அதன்பிறகு விக்கிப்பீடியா பார்க்கிறார்கள். அங்கு பெரும்பாலானோர், ஆபாசத் தளங்களை பார்ப்பதுடன், வீடியோக்களை டவுன்லோடு செய்கிறார்கள்’ சில பயணிகள், இலவச வைஃபை மூலம் ஆப்ஸ்கள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களை டவுன்லோடு செய்கிறார்கள். பாட்னாவிற்கு அடுத்தாக ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் அதிகமானோர் இணைய தேடுதலில் ஈடுபடுகிறார்கள். அதைத்தொடர்ந்து முறையே பெங்களூரு, புது டெல்லி ரயில் நிலையத்தில் அதிகமானோர் இலவச வைஃபை இணையத்தை பயன்படுத்துகின்றனர்’ என்றார்.

பாட்னா ரயில் நிலையத்தை ஒரு நாளைக்கு 200 ரயில்கள் கடந்து செல்கின்றன. அதனால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து காணப்படும். தானாபூரை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் பாட்னா ரயில் நிலையத்தில் தான் முதன்முறையாக இலவச வைஃபை வசதி கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பாட்னா ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதி மூலம் ஒரு ஜிபி வழங்கப்படுகிறது. இதனை 10 ஜிபியாக (குறைந்த வேகத்துடன்) அதிகரிக்க ரயில்டெல் திட்டமிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close