[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

காட்டு விலங்கை காக்கும் பணியில் வீட்டு விலங்கு... ஜூலி எனும் சிறப்பு மோப்ப நாய்...!

speacial-dog-appoint-for-control-criminal-acts

தேக்கடி புலிகள் காப்பக வனப்பகுதியில் நடைபெறும் குற்றச்செயல்களை தடுக்க வனத்துறை புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தேக்கடி புலிகள் காப்பக பகுதியில் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கேரள வனத்துறை மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, மோப்ப நாய் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அதில் அங்கம் வகிக்கும் ஜூலி என்ற நாய்க்கு உத்தரபிதேசத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தற்போது கண்காணிப்பு பணியில் ஜூலி களமிறக்கப்பட்டுள்ளது.

ஜூலிக்கு தனி இல்லம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கவுரவிக்கும் விதமாக அதன் ஓவியம் வரையப்பட்டு, பெயர்ப்பலகையும் பொருத்தப்பட்டுள்ளது. பயன்படுத்த வேண்டிய பெல்ட், மாத்திரைகள் என சகல வசதிகளும் ஜூலிக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அதன் கண்காணிப்பில் குற்றச்செயல்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறுகின்றனர் வனத்துறையினர்.

தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வன பகுதியில் காட்டு விலங்குகளுக்கு வீட்டு விலங்கு காவல் காக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது‌.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close