[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

பாகிஸ்தானை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் தயார்: நவாஸ் ஷெரிப்

prepare-the-necessary-measures-to-protect-pakistan-nawaz-sharif

பாகிஸ்தானை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் தயார் என பிரதமர் நவாஸ் ஷெரிப் அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் யூரி பகுதியில் ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். அதற்குப் பதிலடியாக நேற்றிரவு 12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ராணுவத்தின் சிறப்பு விமானப்படை பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 500‌ மீட்டர் முதல் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 5 பயங்கரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. மேலும் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியதை இந்திய ராணுவ உயரதிகாரி ரன்வீர் சிங் உறுதி செய்தார்.

இந்த தாக்குதலில் தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்ததாகவும், 9 வீரர்கள் காயமடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. எந்த சூழலையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், தக்க பதிலடி தரப்படும் என்றும் அந்நாடு கூறியுள்ளது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், பாகிஸ்தானை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் தயார் என அறிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close