[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ஆம்புலன்ஸ் வசதி செய்து தர மறுப்பு.. இறந்தவர் உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு சுமந்து சென்ற அவலம் !

their-request-for-ambulance-turned-down-family-carries-dead-body-in-a-plastic-bag-in-bihar

பீகாரில் ஆம்புலன்ஸ் வசதி செய்து மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததால் இறந்தவர் உடலை உறவினர்கள் பிளாஸ்டிக் பையில் சுமந்து சென்ற அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கடிகர் பகுதியைச் சேர்ந்த சிந்து குமார் என்பவர் கடந்த 14 நாட்களுக்கு முன்பாக கங்கை ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பின் செப்டம்பர் 25-ல் அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக இறந்தவரின் உடலை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் உடல் மிகவும் அழுகிய நிலையில் உள்ளதால் மருத்துவர்கள், இறந்த உடலை அருகிலுள்ள பாகல்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

கடிகரில் இருந்து பாகல்பூர் 85 கிலோமீட்டர் மீட்டர் என்பதால் சிந்து குமாரின் உறவினர்கள், தங்களிடம் பணம் இல்லாததால், ஆம்புலன்ஸ் வசதி செய்து தருமாறு மருத்துவமனை நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்தவித வசதியும் செய்து தர முன்வரவில்லை.

இதனைத்தொடர்ந்து இறந்தவர் உடலை அவரது உறவினர்கள் மூன்று பேர் சேர்ந்து, பிளாஸ்டிக் பையில் கட்டி அதனைதூக்கி கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close