[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

நாடு முழுவதும் தியாகத் திருநாளான பக்ரீத் உற்சாகக் கொண்டாட்டம்

eid-al-adha-celebrated-across-country

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்திலும் அனைத்து பள்ளி வாசல்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சென்னையில் பள்ளிவாசல்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்தோடு தொழுகையில் ஈடுபட்டனர். தியாகத் திருநாளான இன்று, ஏழை எளியோருக்கு உணவு அளித்து இஸ்லாமியர்கள் மகிழ்ந்தனர். வேலூர்,‌ ஆம்பூர், திண்டுக்கல், திருச்சி, கோவை உள்ளிட்ட ஊர்களில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி சிறப்பு தொழுகைகள் நடத்தினர். டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் ஈத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close