[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருவாரூர்: மன்னார்குடியில் தனது ஆதரவாளர்களுடன் திவாகரன் ஆலோசனை
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனுக்கு உடல்நலக்குறைவு
  • BREAKING-NEWS அனைத்து அமைச்சர்களும் நாளை சென்னையில் இருக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • BREAKING-NEWS நீட்தேர்வு விவகாரத்தில் நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு
  • BREAKING-NEWS ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது
  • BREAKING-NEWS சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி ஈபிஎஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: முத்தரசன்
  • BREAKING-NEWS உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்
  • BREAKING-NEWS வேளாண் இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
  • BREAKING-NEWS தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு
  • BREAKING-NEWS அதிமுக பொதுக்குழுவை கூட்டும் போது யாருக்கு வலிமை எனத் தெரியும்: எம்எல்ஏ ஆறுகுட்டி
சுற்றுச்சூழல் / சுகாதாரம் 11 Jun, 2017 12:45 PM

பழைய சோறு, பச்சை மிளகா... ஒரு பார்சல்!

ice-biryani-good-for-health

 

பழைய சாதம் என நினைக்கும் போதே சிலர் இப்போது கிடைக்காதா என ஏங்குவது உண்டு. பழைய சாதத்தை ஐஸ் பிரியாணி என்றெல்லாம் அழைப்பது உண்டு. இந்த காலத்திலும் பழைய சோறுக்கு இருக்கிறது மவுசு.

இளைய தலைமுறை சாண்ட்விச், பீட்சா, பர்கர் என ஃபாஸ்ட் புட் பக்கம் சாய்ந்தாலும் பாரம்பரிய உணவான கூழ், கம்பு, திணை போன்றவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த இடத்தில் பழைய சோறும் உள்ளது. அந்த காலத்து முதியவர்கள் கூட திடகாத்திரமாக இருப்பதற்கு முக்கியமான ஒன்று பழைய சோறு

பழைய சோறு பற்றிய ஆய்வு ஒன்றை அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association) நடத்தியுள்ளது. அதில் பழைய சோற்றின் பெருமைகளும் பலன்களும் பட்டியலிடப் பட்டிருக்கின்றன. முதல் நாள் மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றி அடுத்த நாள் அதை சாப்பிடுவதே பழைய சோறு. வெறும் தண்ணீர் சாதத்தில் என்ன சத்து இருக்கப் போகிறது என இன்றைய இளசுகள் நினைப்பதுண்டு. 
பழைய சோறு புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. ஒவ்வாமைப் பிரச்னை, தோல் தொடர்பான வியாதிகளுக்கு நல்ல மருந்து பழைய சோறு. நீராகாரம் எனப்படும் பழைய சோற்றில் உள்ள தண்ணீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். அதைவிட முக்கிய பலன், பழைய சோறு இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். தோல் சுருக்கங்கள் வருவதை குறைக்கும். வயிற்றுப் புண், மலச்சிக்கல், உடல் சோர்வு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு, பழைய சோறு.

நேற்று வைத்த சாதம் கெட்டு போய் பாக்டீரியா போன்ற தொற்றுக்கள் வராதா என சிலர் நினைப்பது உண்டு. ஆமாம் பழைய சோற்றிலும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியா உள்ளது. இது கால்சியம், புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், விட்டமின் B12 போன்ற சத்துகளை தரும் திறன் கொண்டது. இதைவிட எளிதாக கிடைக்கும் ஆரோக்கிய அமிர்தம் வேறு இருக்கிறதா? பழைய சோற்றுக்குத் தொட்டுக் கொள்ள பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் செம பொருத்தம்.

சர்க்கரை நோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அளவோடு இதைச் சாப்பிடுவது நல்லது. இனி பச்சை மிளகாயையும் பழைய சோற்றையும் பார்சல் பண்ணலாமே!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close